Advertisment

ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்;ஏன்?-தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்

WATER

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்திஅமைச்சகத்தின்கீழ், மத்திய அரசு கொண்டு வந்ததால்விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை தமிழக அரசின் பொதுப்பணித் துறை விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்ததற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சி தலைவர்கள் மற்றும்விவசாய சங்கங்கள்உள்ளிட்டவைஎதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

அதில், காவிரி மேலாண்மை வாரியத்தை ஜல்சக்தி துறையின் கீழ், மத்திய அரசு கொண்டு வந்ததால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.ஜல்சக்தி ஆணையத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்தது ஒரு நிர்வாக நடவடிக்கை ஆகும். காவிரி நீர் ஆணையம் முறைப்படுத்தும் குழு நடவடிக்கை அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது என விளக்கம் அளித்துள்ளது.

JAL SHAKTI Kavery water Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe