cauvery management board metting video conference

Advertisment

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 22- ஆம் தேதி அன்று காணொளி மூலம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில்தான் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நீர் திறப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். குறிப்பாக, அந்த மாநிலங்களில் பெய்து இருக்கும் மழையின் அளவு அடிப்படையிலும், அணை பகுதிகளில் எவ்வளவு நீர் இருப்பு உள்ளது என்ற அடிப்படையிலும் நீர் திறப்பு முடிவு செய்யப்பட உள்ளது.

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியிருந்த நிலையில் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.