Skip to main content

உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

Published on 14/05/2018 | Edited on 14/05/2018
k.balakrishnan cpim



உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு  பல்வேறு காலதாமதம் செய்து வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு திட்ட அறிக்கையை பெற்று உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டறிய வேண்டும். அதில் விவாதிக்கப்படும் கருத்துகளை கொண்டு  வரைவு திட்டத்தை ஏற்கலமா? என முடிவு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
 

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு பல்வேறு தவணைகளை உச்சநீதிமன்றத்தில் வாங்கியது.  இறுதியாக இன்று (திங்கள்) வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே பிப் 16-ந் தேதி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு மத்திய அரசு  கர்நாடகத்தில் தேல்தல் நடைபெறவுள்ளதால் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்திக்க முடியாத நிலையில் மத்திய அமைச்சரவையை கூட்ட முடியவில்லை. பிரதமரின் ஒப்பதலையும் பெறவில்லையென்றெல்லாம் காலம் தாழ்த்தி வந்தது மத்திய அரசு. தற்போது கர்நாடக தேர்தல் முடிந்த நிலையில் திட்ட அறிக்கையை பிரதமர் மற்றும் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் தாக்கல் செய்ப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தை கர்நாடக தேர்தலை காட்டி மத்திய மோடி அரசு ஏமாற்றியுள்ளது என்று இதன் மூலம் நிறுபிக்கப்பட்டுள்ளது.
 

    கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காகவே மத்திய அரசு திட்டமிட்டு இந்த காலதாமதத்தை ஏற்படுத்தி இருப்பதை ஏற்கமுடியாது. எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நாளையே (செவ்வாய்) கூட்ட வேண்டும். மத்திய அரசு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு வரைவு திட்ட நகலை வழங்க வேண்டும். அந்த வரைவு திட்டத்தின் நகல்களை  தமிழக அரசு அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்கி, அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து அதன்படி வரைவு திட்ட அறிக்கையை ஏற்பதா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
 

    தாக்கல் செய்யப்பட்ட வரைவு அறிக்கையில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து அம்சங்களும் நிறைந்த அதிகாரம் பொருந்திய வரைவு திட்டமாக இது இருக்க வேண்டும். இதில் கர்நாடக, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்நிலைகள், அனைகளை நிர்வகிக்கும் திறன் பெற்றதாக இந்த வாரியம் அமைய வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது சிரமம் தான். கடந்த பிப் 16 மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்து இருந்தால் இன்னேறம் வழக்கு ஒரு முடிவுக்கு வந்து இருக்கும். தற்போது வரும் 16-ந்தேதிக்கு மேல் நீதிமன்ற விடுமுறை வருகிறது. இறுதி நாளில் தாக்கல் செய்தால் வழக்கை இழுத்தடிக்கும் அநீதியை மத்திய அரசு செய்கிறது என்றே தோன்றுகிறது என கூறினார். இவருடன் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், வாஞ்சிநாதன்,பாரதிமோகன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.