cauvery issue

Advertisment

ஜூலை மாதத்திற்கான 34 டி.எம்.சி. தண்ணீரை விடுவிக்க ஆணைய உத்திரவை வரவேற்கிறோம் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

காவிரி மேலாண்மை ஆணையம் தனது முதல் கூட்டத்திலேயே ஜூலை மாதத்திற்கான 34 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு விடுவிக்க உத்திரவு பிறப்பித்துள்ளதை வரவேற்கிறோம்.இவ்வாண்டு ஒரு போக சம்பா சாகுபடியாவது மேற்க்கொள்ள முடியும் என நம்புகிறோம்.

Advertisment

உத்திரவை கர்நாடகம் ஏற்றுக் கொள்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டிய தேவையில்லை.கர்நாடக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆணையத்தின் உத்திரவை காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு உடன் நிறைவேற்ற வேண்டும். அதற்கான வகையில் கர்நாடக அனைகளின் தண்ணீரை அன்றாடம் கணக்கிட்டு பகிர்ந்தளிக்கும் நிர்வாக அதிகாரத்தை அனையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

உச்ச நீதிமன்றத்திற்கு இணையான ஆணைய உத்திரவை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும். இதை யார் மீறினாலும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குட்படுத்த ஆணைய தலைவர் மசூத் உசேன் அவர்கள் முன்வர வேண்டும்.கூட்ட முடிவுகளையும், நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அவ்வபோது உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.