Advertisment

ஆறு மாணவர்களை பலிவாங்கியது காவிரியா?  மணல்கொள்ளையா?- பாபநாசம் அவலம்

va

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Advertisment

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிஸ்தலம் சீதாலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், வெங்கடேசன், விஸ்ணு, மணிகண்டன், ஸ்ரீ நவீன், ரிஸ்வந்த், சிவபாலன், சஞ்சய் ஆகிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் ஏழு பேரும் காவிரி ஆற்றில் குளிக்க ஆர்வமாக சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் அங்காங்கே அதிக அளவில் மணல் அள்ளப்பட்டிருந்ததால், நிலைக்காத அளவில் ஆழமாக இருந்துள்ளது. இதை அறியாமல் ஏழு பேரும் தண்ணீரில் குதித்து விளையாடிய நிலையில் சூழலில் மணல் அள்ளிய பகுதியில் மாட்டிக்கொண்டனர்.

va

சஞ்சய் என்ற மாணவன் மட்டும் நீச்சலடித்து போராடி தப்பித்து கரை திரும்பியிருக்கிறான். அவன் பதட்டத்துடன் ஓடி பொதுமக்களிடம் கூறியுள்ளான். அதன் பிறகு தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும், தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர தேடுதலுக்கு பிறகு நான்கு மாணவர்களின் உடல் கிடைத்தது, மீதமுள்ள இரண்டு பேரின் உடலையும் இரண்டு நாள் தேடுதலுக்குப்பிறகு கண்டுபிடித்து பாபநாசம் அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்துள்ளனர்.

வெங்கடேசன், விஸ்ணு, மணிகண்டன், ஸ்ரீ நவீன், ரிஸ்வந்த், சிவபாலன் ஆகிய 6 மாணவர்களின் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கோரசம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பாபநாசம் தொகுதியின் எம்,எல்,ஏ வும். தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில்சென்று ஆறுதல் கூறிவிட்டு தனது சொந்த பணத்தில் குடும்பத்திற்கு தலா 25000 ரூபாய் வீதம், ஒன்றரை லட்ச ரூபாய் ஆறு குடும்பத்திற்கு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரையின் பேரில் பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமியிடம் எடுத்துக்கூறி, நிவாரணம் பெற்றுத் தரப்படும் என அவர் தெரிவித்தார்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 6 மாணவர்கள் இறந்த சம்பவம், அந்த கிராமத்தையே சோகக்காடாக மாற்றியிருக்கிறது. அந்த கிராமத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த கோர சம்பவத்தால் வேதனையடைந்துள்ளனர்.

ஆறு மாணவர்களின் இறப்பிற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். காவிரி, மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள தடைவிதித்துள்ள நிலையிலும், மணல் தட்டுப்பாட்டை சாதகமாக்கிக்கொண்டு அமைச்சர் துறைக்கண்ணுவின் ஆசியோடு, அவரது ஆதரவாளர்கள் இரவு பகல் பார்க்காமல் மணலை தோண்டி கொள்ளையடித்தனர். சுமார் இருபது அடிக்கு மேல் ஆழமாக தோண்டி கொள்ளையடித்ததே இவர்களின் இறப்பிற்கு முழு காரனம், இதற்கு கபிஸ்தலம், சுவாமிமலை, திருவையாறு ஆகிய காவல்நிலைய காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர். உடனடியாக அரசு ஆறு பேரின் இழப்பிற்கு காரனம் ஆற்றின் வெள்ளம் மட்டும் தானா, மணல் கொள்ளை காரணமா என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

vasan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe