Advertisment

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம்! - நாளை மறுநாள் அடிக்கல் நாட்டும் முதல்வர்!

Cauvery-Gundaru Link Project laying foundation stone

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சியில் வரும் பிப்ரவரி 21- ஆம் தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூபாய் 6,941 கோடி மதிப்பில் காவிரி-தெற்கு, வெள்ளாறு- வைகை- குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட முதல்கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல், ரூபாய் 3,384 கோடியில் காவிரி உபவடி நிலத்தில் நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளைப் புனரமைக்கும் பணிக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில், அமைச்சர்கள், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

cm edappadi palanisamy Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe