காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி நீர் பங்கீடை சுமுகமாக மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

Advertisment

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் கால அவகாசம் கோரியுள்ளது. அதாவது, தீர்ப்பு வெளியான பிப்.16ம் தேதியில் இருந்து 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.