Skip to main content

காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அரசிதழில் வெளியீடு!

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

காவிரி ஆற்றுப் படுகைகளில் உள்ள வேளாண் நிலங்களை பாதுகாப்பதற்கான வேளாண் மண்டல சட்ட மசோதா சட்டப்பேரவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அப்போது இந்தச் சட்டத்தில் உள்ள சில அம்சங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க அதனை தெரிவுக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

 

Cauvery Delta - TNAssembly

 

 

இந்நிலையில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் வேளாண் மண்டல மசோதா சட்டமாகியுள்ளது. மேலும் இந்த சட்டம் அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

"இதுதான் தொழிலாளர்கள் நலனுக்கான அரசா?" - இயக்குநர் லெனின் பாரதி கேள்வி

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

lenin bharathi about labour amendment bill

 

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

இந்நிலையில் இந்த மசோதா குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் இயக்குநர் லெனின் பாரதி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இதுதான் தொழிலாளர்கள் நலனுக்கான அரசா…? தமிழ்நாடு அரசே தொழிலாளர்கள் விரோத மாசோதாவை கைவிடு" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் பதிவில் அவர் தமிழ்நாடு அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சி.வி.கணேசனை டேக் செய்துள்ளார்.  

 

 

Next Story

தொழிலாளர் சட்டத்திருத்த மசோதா; இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

Labor Amendment Bill; The Communist Party of India strongly opposed it

 

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

திமுகவிற்கு 125 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 4 மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யவில்லை. மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பாதியளவு (118) இருந்தாலே சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்ற நிலையில் 125க்கும் மேற்பட்டோர் இருந்தது மசோதா நிறைவேறக் காரணமாக அமைந்தது.

 

பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் சிபிஎம், சிபிஐ, விசிக போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மேலும், இதுகுறித்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

Labor Amendment Bill; The Communist Party of India strongly opposed it

 

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளதாவது, ''இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது தொழிலாளர் உணர்வுக்கும் உரிமைக்கும் எதிரானது. தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கதவுகளை மூடி வேலை நேரத்தை அதிகரிப்பது எந்த வகையிலும் ஏற்றத்தக்கது அல்ல. சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது'' எனக் கூறியுள்ளார்.

 

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ''தொழிலாளர் திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது. தொழிலாளர் விரோதச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்'' எனத் தெரிவித்துள்ளார்.