Skip to main content

காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்த தமிழக அரசு முன் வரவேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

P.R. Pandian


காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தமிழக காவிரி விவசாயிகள் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடி அருகே வடகோவனூர், தென் கோவனூர், தட்டான்கோவில், மேலகண்டமங்கலம் பகுதிகளில் கோரையாற்றில் மணல் கொள்ளை நடந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டார். மேலும் அரிச்சந்திரா ஆறு ஆசிய வளர்ச்சி வங்கித் திட்டத்தில் தலைப்பு மதகு சீரமைப்பு பணியினையும் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 


அப்போது அவர், ''காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன ஆறுகள் விளை நிலப்பகுதிகளில் 20 அடி முதல் 50 அடி ஆழம் வரை அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கொள்ளை போகிறது. இதனால் ஆற்றுக் கரைகள் சூறையாடப்பட்டு பாசன காலங்களில் பாசனம் பெற முடியாத நிலை ஏற்ப்படும். வெள்ளக் காலங்களில் உடைப்பெடுத்து பல நூறு கிராமங்கள், விவசாயம் அழியும் பேராபத்து ஏற்படும் என எச்சரிக்கிறோம். 
 

cauvery delta


குறிப்பாக மன்னார்குடி அருகே ஓடும் மிகப் பெரும் பாசன வடிகால் ஆறான கோரையாறு சுமார் 1 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன ஆறாகவும், வெள்ளக்காலங்களில் சுமார் 7ஆயிரம் கன அடி வரை உபரி நீரை கடலுக்கு கொண்டு செல்லும் கொள்ளளவும் கொண்டதுமாகும். இவ்வாற்றில் வட கோவனூர் முதல் முத்துப்பேட்டை வரை சுமார் 40 கி.மீ. தூரம் ஆற்று இருகரைகளையும் குடைந்தும், நீரோட்ட பகுதிகளிலும் 30 முதல் 40 அடி ஆழம் வரை மணல் சூரையாடப்பட்டுள்ளதால் மழை வெள்ளக் காலங்களில் உடைப்பெடுத்து மன்னார்குடி முதல் வேதாரண்யம் வரை பேரழிவை ஏற்படுத்தும் பேராபத்து ஏற்ப்பட்டுள்ளது. 


இதற்குத் துணை போன இப்பகுதிகளுக்குப் பொறுப்புள்ள பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளையர்களை அடையாளம் கண்டு கடும் தண்டனை வழங்க வேண்டும். 

 

cauvery delta


காவிரி டெல்டாவில் கடந்த ஆண்டு (2019) ரூ85 கோடி மதிப்பிட்டில் தூர் வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 60% பணிகள் நிறைவுற்றது. மீதம் 40% பணிகள் 2020 பிப்ரவரி மாதம் துவங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்களால் உத்திரவாதமளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்பணிகளின் நிலை குறித்து தெளிவுப்படுத்தவில்லை. 
 

இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன் ரூ 65 கோடி மதிப்பீட்டில் தூர் வாரும் பணிகள் டெண்டர் விடப்பட்டது. ஒன்றிரண்டு பணிகள் மட்டுமே துவங்கி உள்ளதாகத் தெரியவருகிறது. மற்ற பணிகள் துவங்க முன் வரவில்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் பணிகள் பிரித்தளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். இதனால் பல ஒப்பந்தக்காரர்கள் பணிகளைத் துவங்காமல் காலம் கடத்தி வருவதாகத் தெரிய வருகிறது.
 

மேலும் வரும் ஜூன் 12 இல் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க குறுகிய நாட்களே உள்ள நிலை உள்ளதால் பாசனம் தடைப்பட்டு, வெள்ளக் காலங்களில் பேரழிவு ஏற்பட்டால் பாதிப்பிற்குச் சட்டமன்ற உறுப்பினர்களே பொருப்பேற்க வேண்டும். 
 

cauvery delta

 

http://onelink.to/nknapp


கோரையாறு தூர் வாரப்படாததால் புதர் மண்டி ஆறு என்ற சுவடே தெரியாமல் உள்ளது. குடிமராமத்து திட்டங்களில் பொதுப்பணித்துறை பொறியாளர்களே பல இடங்களில் தூர் வாரியதாக மோசடி செய்து வருவதாகத் தெரிகிறது. 
 

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் மேற்க்கொள்ளப்படும் பணிகள் 6 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே இவைகள் குறித்து ஆய்வு செய்து பணிகளைத் துரிதப்படுத்த உயர் மட்டக்குழுவை உடன் காவிரி டெல்டாவிற்கு அனுப்பி வைத்து விவசாயிகள் கருத்தறிந்து துரித நடவடிக்கைகளை மேற்க்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வலியுறுத்துகிறேன் என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சம்பா மகசூல் இழப்பீடு 560 கோடி ரூபாய் - தமிழக அரசு அறிவிப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

nn


சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கான அறிவிப்பைத் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பாகத் தமிழக அரசின் வேளாண் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏழு லட்சம் ஏக்கர் சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது' எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2022-23 ஆம் ஆண்டில் சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 மெட்ரிக் டன் உற்பத்தி அடையப்பட்ட போதிலும், வடகிழக்கு பருவமழை குறைவாகப் பெய்த காரணத்தால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் 33 சதவீதத்திற்கும் மேற்பட்ட வேளாண் பயிர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து 181 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கி உள்ளது.  இந்த நிலையில் தற்போது 560 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. 6 லட்சம் தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என்று வரவு வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Next Story

மணல் கொள்ளையரிடம் பணம் கேட்டு கறாராகப் பேசிய போலீஸ்; பரபரப்பைக் கிளப்பிய ஆடியோ 

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

police demanded money from the sand robber and negotiated a deal

 

மணல் கொள்ளையர்களிடம் பணம் கேட்கும் போலீஸின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர மற்றும் கிராம ,உமராபாத் உள்ளிட்ட  காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட  பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் பாலாற்றில் மணல் கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது . இந்நிலையில் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் ஆம்பூர் அடுத்த கட்டவாரபல்லி  பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மணல் கொள்ளையரிடம் பீட் பணம் இன்னும் கொடுக்கவில்லையாமே? ஏன் தரல? உடனே கொண்டு வந்து தா என தொடர்ந்து (மணல் கொள்ளையரிடம்) போன் செய்து பீட் பணம் குறைவாக கொடுத்தால் இன்ஸ்பெக்டர் மொத்த வண்டியையும் நிறுத்தி விடுவார் என தலைமை காவலர் சீனிவாசன் கறாராக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி காவல்துறையினர்  மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

 

இதுபோன்று மணல் கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்படும் தலைமை காவலர் மீது துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஆல்பட்ர் ஜான் தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்