Advertisment

'குடிமராமத்து பணிகளை விரைவுபடுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்'- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

cauvery delta  Irrigation canals cleaning process special officers appointed

காவிரி டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்துபணிகளைக் கண்காணிக்கவும், விரைவுபடுத்தவும் ஏழு மாவட்டங்களுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

Advertisment

அதன்படி, தஞ்சை மாவட்டத்திற்கு ககன்தீப் சிங் பேடி, திருவாரூர் மாவட்டத்திற்கு ராஜேஷ் லக்கானி, நாகை மாவட்டத்திற்கு சந்திரமோகன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அபூர்வா, கரூர் மாவட்டத்திற்கு கோபால், திருச்சி மாவட்டத்திற்கு கார்த்திக், அரியலூர் மாவட்டத்திற்கு விஜயராஜ்குமார் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் 10 நாட்களில் விரைந்து முடிப்பதை அதிகாரிகள் உறுதி செய்வர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் 12- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் பாசன வாய்க்கால்களை விரைவாக தூர்வாரப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

delta districts SPECIAL OFFICERS tn govt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe