Advertisment

காவிரி ஆணையம் பொம்மை ஆணையம்; திருவாரூரில் மணியரசன் குற்றச்சாட்டு!

"காவிரி ஆணையம் பொம்மை ஆணையம் எனவே அந்த ஆணையத்தை கலைத்துவிட்டு அதிகாரமுள்ள ஆணையத்தை உருவாக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாட வேண்டும்," என்கிறார் காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைவர் மணியரசன்.

Advertisment

 Cauvery Commission Toy Authority; Maniyarasan charges in Thiruvarur!

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துகாவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் எனஅனைத்து டெல்டா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை அக்குழுவின் தலைவர் மணியரசன்சந்தித்தார். அப்போது அவர்," காவிரி ஆணையம் ஒரு பொம்மை ஆணையம், அது கர்நாடகத்திற்குசாதகமாக செயல்படுகிறது. எனவே அதை கலைத்துவிட்டு அதிகாரமுள்ள ஆணையத்தை கோர தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்," என கூறினார்.

அதன்பிறகு திருவாரூரில் போரிட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தார்.

protest Hydro carbon project
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe