காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

cau

காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இறுதித்தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டிருந்தது. அந்த கெடு முடிந்தும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பின்னர் நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அப்போது, அந்த அறிக்கையை தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதில் உள்ள நிறைகுறைகளை மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

case cauvery court supreme today
இதையும் படியுங்கள்
Subscribe