Cauvery Bridge Repair Work; Minister K.N. Nehru in person

திருச்சி காவிரி பாலத்தில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment

திருச்சி காவிரி பாலத்தில் அமைந்துள்ள 14 கண்களும் அவற்றிற்கு கீழ் வைக்கப்பட்டுள்ள 192 பேரிங்குகளும் புதிதாக மாற்றப்பட்டு மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பாலத்தினை தாங்கி நிற்கும் தூண்களின் பணிகள் முடிக்கப்பட்டு பாலத்தின் மேல்தளத்தில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காவிரி பாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பணிகளை விரைந்து முடிக்கவும், குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் பாலத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.