காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகளுடன், விவசாய சங்கங்களும் சாலை மறியல், ரயில் மறியல் கடையடைப்பு போராட்டங்களை நடத்தி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, கீரமங்கலம், அறந்தாங்கி, விராலிமலை, கீரனூர், திருமயம் என்று சுமார் 30 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் கலந்து கொண்டார். அப்போது கைது செய்யப்பட்டவர்களை கொண்டு செல்ல வாகன வசதிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் அடுத்தடுத்து 3 முறை மறியல் நடந்தது. மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.