காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி வழக்கை அரசமைப்பு சட்ட ஆயத்திற்கு மாற்ற வேண்டும், டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் கல்லணையில் இன்று ஒன்று கூடல் உறுதி மொழி ஏற்பு கூட்டம் நடைப்பெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏக்கள் தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ், திரைப்பட இயக்குர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.