Skip to main content

வாணி ஜெயராம் இறப்பிற்கு காரணம்; வெளியான முதற்கட்ட பிரேதப் பிரேத பரிசோதனை அறிக்கை

Published on 05/02/2023 | Edited on 05/02/2023

 

Cause of Vani Jayaram's tragedy; Preliminary post-mortem report released

 

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்பட்டது.

 

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரேதப் பரிசோதனையானது முடிந்த உடன் அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பின்னணி பாடகி சித்ரா, டிரம்ஸ் மணி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

இந்நிலையில் வாணி ஜெயராமின் பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில் படுக்கை அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது நிலை தடுமாறி விழுந்ததால் வாணி ஜெயராம் தலையில் பலமாக அடிபட்டது. தலையில் ஏற்பட்ட அடி காரணமே வாணி ஜெயராம் உயிரிழப்பிற்கு காரணம் என பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் நெற்றியில் இருந்த காயம் மற்றும் மேசையின் மீது இருந்த ரத்தக்கறை ஆகியவற்றை வைத்து தடயவியல் நிபுணர் சோதனையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் வாணி ஜெயராம் வீட்டிற்கு வெளியில் இருந்து எந்த நபரும் வரவில்லை என ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. தடயவியல் அறிக்கை பிரேதப் பரிசோதனை ஆய்வின் முதல்கட்ட அறிக்கை, வீட்டின் சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சட்டசபையில் பாடகி வாணி ஜெயராமுக்கு மவுன அஞ்சலி

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

A silent tribute to singer Vani Jayaram in the Assembly

 

2023 - 2024 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 20ஆம் தேதி தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து கடந்த 21ம் தேதி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். நேற்று (22.03.2023) உகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இன்று (23.03.2023) பட்ஜெட் கூட்டத்தொடரின் 3 ஆம் நாள் கூட்டம் சட்டப்பேரவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அப்போது பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் இரண்டு மணித்துளிகள் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, தங்கவேலு உள்ளிட்டோருக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

 

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) கடந்த மாதம் 4 ஆம் தேதி (04.02.2023) காலமானார். 1971 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் கிட்டத்தட்ட 10,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் வாங்கியுள்ளார். திரைத்துறையில் இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி சமீபத்தில் மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 


 

Next Story

“மனம் வேதனை அடைகிறது” - வாணி ஜெயராம் உடலுக்கு அண்ணாமலை நேரில் அஞ்சலி

Published on 05/02/2023 | Edited on 05/02/2023

 

"Heartaches" Vani Jayaram Tributes in person at Annamalai

 

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்பட்டது.

 

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரேதப் பரிசோதனையானது முடிந்த உடன் உடலானது நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , பின்னணி பாடகி சித்ரா, டிரம்ஸ் மணி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வாணி ஜெயராமுக்கு ஜனவரி 26ல் மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் அவர்களுக்கு கிடைத்தது. 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். நேர்மைக்கு சொந்தக்காரர். மிக அற்புதமான பாடகர். 

 

சமீபத்தில் பாஜகவின் தேசியத் தலைவர், அகில இந்திய பொதுச் செயலாளரை இங்கு அனுப்பி வைத்தார். இங்கு வாணி ஜெயராமை சந்தித்து விருதுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அன்று அவருடன் என்னால் வர முடியவில்லை. நான் டெல்லி செல்ல இருந்த காரணத்தால் அவர் மட்டும் வந்திருந்தார். இன்று இப்படி ஆனதை பார்க்கும் பொழுது மனம் வேதனை அடைகிறது. பத்மபூஷன் விருதினைக் கூட நேரில் வாங்க முடியவில்லை என்ற வேதனை உள்ளது” எனக் கூறினார்.