Advertisment

பிரசவித்த பெண் உயிரிழப்பு;தவறான சிகிச்சையே காரணம்;உறவினர்கள் முற்றுகை!

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளம் கர்ப்பிணிப் தாய் பலியானதை கண்டித்து மருத்துவமனையை 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

 The cause of ill treatment ;relatives blockade!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியதிற்கு உட்பட்ட திருக்களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன் 35. இவர் விவசாய கூலி தொழிலாளி, இவர்மனைவி பவிதா 30. இவர்களுக்கு தீரன் என்ற 2 வயது மகன் உள்ளார். இரண்டாவதாக கடந்த 24 ஆம் தேதி குடவாசல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அப்போது பவிதாவுக்கு இரத்தம் குறைவாக உள்ளது என கூறி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisment

 The cause of ill treatment ;relatives blockade!

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையில் கர்ப்பத்தடை ஊசி போடப்பட்ட சிறிது நேரத்திலேயே பவிதா மயக்கம் அடைந்த சில நிமிடங்களில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு பவிதாவின் மரணத்திற்கு காரணம் தவறான சிகிச்சையே எனக்கூறி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

govt hospital protest Treatment Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe