The cause of the collector in the accident ..!

Advertisment

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சேலத்திற்குச் சென்ற திருச்சி மாவட்ட ஆட்சியரின் கார் விபத்துக்குள்ளானது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சார் ஆட்சியரின் திருமண நிகழ்வு சேலத்தில் நடைபெற்ற நிலையில், திருமண நிகழ்வை முடித்து மீண்டும் திருச்சிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது தாசநாயக்கன்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது.நல்வாய்ப்பாக இந்த விபத்தில் அவருக்கு எந்தவித காயமும் இல்லை.