Advertisment

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் உடல் தகனம்

rathinavel pondiyan

rathinavel pondiyanசுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் (89) நேற்று முன்தினம் காலமானார். அண்ணாநகர் 6-வது அவென்யூவில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

ரத்தினவேல் பாண்டியனின் 2-வது மகன் ரவிச்சந்திரன் அமெரிக்காவில் இருந்து நேற்று இரவு வந்தார். அதனால் இன்று இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உடல் வேனில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் வைகோ உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நுங்கம்பாக்கம் இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisment
rathinavel pondiyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe