Skip to main content

மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை தயார். 

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற டிசம்பர் 1ந்தேதி கோடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினசரி காலை, இரவு என இருமுறை சுவாமிகள் மாடவீதியுலா நடைபெறும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனத்துக்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருவார்கள்.
 

 Cauldron is ready for lighting


10ந்தேதி அதிகாலை கோவில் கருவறை எதிரே பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை, 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்படும். ஆண்டுக்கு ஒருமுறை கோயிலை விட்டு வெளியே வந்து அர்த்தநாதீஸ்வரர் பக்தர்களுக்கு சில நிமிடங்கள் காட்சியளிப்பார்.

மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்திற்கு 6 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு சென்று தீபம் ஏற்றும் பணிக்காக திருவண்ணாமலை அஜீஸ் காலனியில் உள்ள மண்ணு நாட்டார் குடும்பத்தினர் கொப்பரை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகின்றனர்.


தீபம் ஏற்றும்போது, வெப்பத்தால் கொப்பரை சேதமடையாமல் இருக்க, மேல்பாகம் 3.75 அடி அகலமும், கீழ்பாகம் 2.75 அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய இரும்பு ராடுடன் கூடிய, செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்து செல்ல வசதியாக, மேல்பாகம் மற்றும் கீழ் பாகத்தில் தலா, நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

 

சார்ந்த செய்திகள்