Advertisment

மாடுகள் விற்பனை மந்தம்.. வியாபாரிகள் ஏமாற்றம்..!

k;l

ஈரோடு கருங்கல்பாளையம்சோதனைசாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமைமாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி சுற்றுப் பகுதியான நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம் போன்றமாவட்டங்களைச்சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளைவிற்பனைக்குக்கொண்டு வருவார்கள். வாரம் தோறும் ஆயிரம் முதல் 1500 மாடுகள் விற்பனைக்காக இந்த சந்தைக்கு வரும்.பசுமாடுகள் ரூபாய் 30 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூபாய் 45 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூபாய் 15,000 வரையும் விற்பனையாகும்.

Advertisment

அதேபோல், இங்கு வரத்தாகும்மாடுகளைக்கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி போன்றமாவட்டங்களில்இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா மகாராஷ்டிரா, கோவா போன்றமாநிலங்களைச்சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து வாங்கி செல்வார்கள்.கரோனாவைரஸ்பரவல்காரணமாகப்பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த ஏப்ரல், 15ம் தேதி முதல் இந்த சந்தைகூடுவதற்குத்தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில்கரோனாபரவல் குறைந்ததையும், மக்களின்வாழ்வாதாரத்தைக்கருத்தில் கொண்டும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்து அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஈரோடு கருங்கல்பாளையம்மாட்டுச்சந்தையினை மாவட்ட நிர்வாகம்வழிகாட்டுதலின் பேரில்,கரோனாவழிகாட்டு நெறிமுறைகளைகடைப்பிடித்து2ந்தேதிமுதல் நடத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது.

Advertisment

இதன்பேரில் கிட்டத்தட்ட நான்கரைமாதங்களுக்குப்பிறகு கருங்கல்பாளையம்மாட்டுச்சந்தை 2 ந் தேதி வியாழக்கிழமை முதல்செயல்படத்தொடங்கியது. முதல் நாள் என்பதால் சொற்ப அளவிலான மாடுகளே வரத்தானது. அதேபோல், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநில வியாபாரிகள் யாரும் முதல் நாள் நடைபெற்ற சந்தைக்கு வரவில்லை. இதனால், மாடுகள் விற்பனையும் மந்தமாகவே நடந்தது. கருங்கல்பாளையம்மாட்டுச்சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் கோபி, சத்தியமங்கலம்,தாளாவடி, கொடுமுடி,சிவகிரிபோன்றபகுதிகளிலிருந்தும், நாமக்கல், கரூர் போன்ற சுற்றுப்புறமாவட்டங்களிலிருந்தும்நூற்றுக்கணக்கான மாடுகளை வாகனங்களில் ஏற்றிவிற்பனைக்குக்கொண்டு வந்தனர். எதிர்பார்த்த விற்பனை நடக்காததால் கொண்டு வந்த மாடுகளுடன் வியாபாரிகள் ஏமாற்றத்துடன்திரும்பிச்சென்றனர்.

cow slaughter
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe