Skip to main content

மருத்துவமனைக்குள் கம்பளிப்பூச்சிகள்.. அச்சப்படும் நோயாளிகள்..!!!

Published on 10/11/2018 | Edited on 10/11/2018

ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள நிலையில் கொசுக்களும் ஈக்களும் உற்பத்தியாகி வரும் நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள மக்களுக்கு  வைரஸ் காய்ச்சல் பரவி அதிக அளவில் பரவி வருகின்றது.

 

Cattle in the hospital ..

 

காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களும் பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் என தினசரி 500க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை முழுவதும் நோயாளிகள் நிரம்பி உள்ளன. இந்நிலையில், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளி பிரிவு பகுதியில் கூட்டம் கூட்டமாக கம்பளி பூச்சிகளும் அட்டை பூச்சிகளும் படை எடுத்து வருவதால் நோயாளிகள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் கம்பளி பூச்சிக்கு பயந்து உள்நோயாளிகள் மருத்துவமனையின் வெளிப்பகுதிக்கு வந்தாலும் தரைப்பகுதிகளிலும், நடைபாதைகளிலும் கம்பளி பூச்சிகளும் அட்டைபூச்சிகளும் வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஊழியர்களும் மருத்துவர்களும் திணறி வருகின்றனர்.

 

Cattle in the hospital ..

   

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்களும் தெரிவிக்கும்போது, "எங்கு பார்த்தாலும் கம்பளிப்பூச்சி  இருப்பதாகவும், படுக்கை அறைக்குள் வருவதாகவும் மேலும் நடந்து செல்லும் இடங்களிலெல்லாம் ஊர்ந்து  வந்து கொண்டிருப்பதால் அச்சமாக உள்ளது எனவும் உடனடியாக கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனவும் தெரிவித்தனர்.

 


                                    

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.