
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சக பள்ளி மாணவனை மற்ற மாணவர்கள் சமூக ரீதியாக தொல்லை கொடுத்து அதன் காரணமாக ஏற்பட்ட முரணால், வீடு புகுந்து அரிவாளால் பள்ளி மாணவனையும் அவரது சகோதரியையும்மாணவர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் சாதி பெயர்களை தாங்கியுள்ள கல்வி நிலையங்களின் பெயர்களை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதி பெயர்களை தாங்கிய கல்வி நிலையங்களின் பெயர்களை நீக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் சார்லஸ் என்பவர் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)