Advertisment

கடவுளுக்கான நேர்த்திக் கடனிலும் சாதி பாகுபாடு...?

கோயிலுக்கு வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்த முடியாமல் ஒரு பெண்ணை அலைய வைத்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறையும், கடவுள் பெயரால் இயங்கும் இந்து அமைப்பும்.

Advertisment

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரது மனைவி மாலதி, அவரே கூறுகிறார் நாங்க வீரப்பன்சத்திரம் பகுதியில்தான் குடியிருந்து வருகிறோம். அங்கு உள்ள மாரியம்மன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது ஈரோட்டில் அது பிரபலம். எனது நெருங்கிய உறவினருக்கு முதல் குழந்தை பிறந்து திடீரென இறந்து விட்டது. மறுபடியும் நல்லபடியாக குழந்தை பிறந்தால் இந்த மாரியம்மன் கோவிலுக்கு மணி வாங்கிக் கட்டுவதாக நேர்த்தி கடன் விட்டு வேண்டியிருந்தேன்.

Advertisment

Caste discrimination incident?

என் உறவினருக்கு மறுபடியும் குழந்தை பிறந்து அது ஆரோக்கியமாக வளர்கிறது. இந்த நிலையில் மாரியம்மனுக்கு வேண்டிய நேர்த்தி கடன்கள நிறைவேற்றுவதற்காக ரூபாய் 11 ஆயிரம் மதிப்பில் 21 கிலோ எடை கொண்ட ஒரு பித்தளை மணியை வாங்கி வைத்திருந்தேன். பிறகு அதை கோவிலுக்கு கொண்டு சென்றேன் மணியை கட்டகோயில் நிர்வாகம் செய்கிற இந்து அமைப்பினர் அனுமதிக்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சென்று முறையிட்டேன். அதிகாரிகள் ரசீது வாங்கச் சொன்னார்கள் அதையும் பணம் கட்டி வாங்கினேன் அதன் பிறகு மீண்டும் இந்த மணியுடன் கோயிலுக்கு சென்றேன் கோயில் நிர்வாகத்தினர் மறுபடியும் மணியை கட்ட அனுமதிக்கவில்லை.

அப்போது அவர்கள் கூறிய காரணம், நான் வாங்கி வைக்கும் மணியில் என் உறவினருக்கு பிறந்த குழந்தையின் பெயரை அச்சடித்திருந்தேன். அந்தப் பெயர் மணியில் இருக்கக் கூடாது என்றனர். பெயரை மணியில் அடித்து பதிவாகி விட்டது இனி அதை அழிக்க முடியாது மேலும் தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களிலும் யாராவது ஒரு ட்யூப் லைட் வாங்கி கொடுத்தாலே உபயம் அல்லது நன்கொடை என்று போட்டு அவர்கள் பெயரை எழுதி வைத்திருப்பார்கள்.

இந்த கோயிலில் மட்டும் அப்படி போடக்கூடாது என்று எந்த தனி உத்தரவும் இல்லையே என கோயில் நிர்வாகத்திடம் நான் கேட்டதற்கு இங்கு நாங்கள் போடும் உத்தரவுதான். பெயர் இல்லாமல் மணியை வைக்கலாம் பெயர் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி விட்டனர். நானும் ஒரு வருடமாக இந்த 11 கிலோ எடை கொண்ட மணியை தூக்கிக் கொண்டு நடக்கிறேன் இதற்கு என்ன தான் தீர்வு என்று தெரியாமல்.

இந்த கோயில் மணியை ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன் என்றார்.

தேர்தல் நடத்தை விதி உள்ளதால் இப்போது ஆட்சியரை சந்திக்க முடியாது பஞ்சாயத்து எலெக்ஷன் முடிந்து வாங்க என்று அந்தப் பெண்ணை போலீசார் திருப்பி அனுப்பினார்கள். கோயிலில் அந்தப் பெண் மணியை கட்ட பெயரை மணியில் பொறித்து காரணம் அல்ல அந்த கோயிலை நீர்வாகிக்கும் இந்து அமைப்பினர் குறிப்பிட்ட சமூகம் இந்தப் பெண் வேறு சமூகம். சாதி பாகுபாடு காரணமாக கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்த முடியவில்லை என்பதே உண்மை. என கூறுகிறார்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள்.

Erode Tamilnadu temple
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe