சாதிய வன்கொடுமையில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் எஸ்பி துரைஎச்சரிக்கை விடுத்துள்ளார்.

attack

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

திருவாரூரில் திருவண்டுதுறையில் கொல்லிமலை என்பவரை சாதிய கண்ணோட்டத்தோடு தாக்கி வாயில் மலம் திணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதோ கோவில் திருவிழாவில் நடந்த முன்விரோதத்தை வைத்துதற்போது என்மீது வஞ்சம் கொண்டு சாதிய கண்ணோட்டத்தோடு என்னை தாக்கி வாயில் மற்றும் சிறுநீர் திணிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட கொல்லிமலை தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சக்திவேல்,ராஜேஷ் என்ற2 பேரை போலீசார்கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை போலீசார் தேடிவருகின்ற நிலையில், மலம் திணிப்பு சம்பவத்தில் கிடைத்துள்ள வீடியோ ஆதாரம் கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள திருவாரூர் எஸ்பி துரை, சாதிய வன்கொடுமையில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.