ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தபடி இருந்தன.
இந்த நிலையில்,"அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள்அனைத்தையும் அரசு கைவிடுகிறது" எனத் தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளைத் திரும்பப் பெறக்கோரி சங்கங்கள் வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. தேர்தல் வருவதால் அரசு ஊழியர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக விமர்சனங்கள் எதிரொலிக்கின்றன.