Advertisment

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கையால் திரும்பப் பெறப்பட்ட வழக்கு!

Case withdrawn by High Court judges warning!

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளில் சம்மந்தப்பட்ட காலத்தில் மேயர்களாக இருந்தவர்களைச் சேர்க்கக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டது.

Advertisment

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்த வழக்கில் 2014- ஆம் ஆண்டு முதல் 2018- ஆம் ஆண்டு வரை அந்த இரு மாநகராட்சிகளிலும் மேயர்களாகப் பதவி வகித்தவர்களையும், அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்க்க உத்தரவிடக்கோரி நேர்வழி இயக்கம்சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பொதுநல வழக்குகள் தொடர்பாக, உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரைகளின் படி, இந்த வழக்கை அபாரதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாகஎச்சரித்தால், வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

order
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe