rahul

பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மீது புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமயம் போலீசார் ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர். மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு மேடை அமைக்கப்படாமல் இருந்ததை கண்டு ஆவேசமாகி, அங்கிருந்த போலீசுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது.

போலீசையும், நீதிமன்றத்தையும் மதிக்காமல் ராஜா பேசப்பேச, அவரை போலீசார் சமாதானம் செய்வதாக உள்ளது அந்த வீடியோ பதிவு. நீதித்துறையையும், காவல்துறையையும் அவதூறாக பேசிய இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எச்.ராஜாவை சிறையில் அடைக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமயம் போலீசார் ராஜா மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.