சிலை கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த தலைமை எழுத்தர் ராஜாவின் வீட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறையினர் சீல் வைத்தனர். அதனை கண்டித்து ராஜாவின் மனைவி விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20180705-WA0061 (1).jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோட்டை மற்றும் அகழியுடன் கூடிய பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. ஆயிறம்ஆண்டுகள் பழமையான அந்த கோயிலில் சுற்றியுள்ள 73 கிராம கோயில்களிலிருந்து பழமையான, ஐம்பொன் சிலைகள், வெங்கலசிலைகள் ஆபரனங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பிற்காக பசுபதிஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2013 ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினர் சிலைகளை கணக்குஎடுத்தனர். பாதுகாப்பாக இருந்த சிலைகளில் கீழமணக்குடி விஸ்வநாதசுவாமி கோயிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி- தெய்வாணை, சந்திரசேகரஅம்மன் சிலைகளும், ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயிலுக்குரிய விநாயகர் சிலை என மொத்தம் 6 சிலைகள் காணாமல் போயிருந்தது.
6 சிலைகள் மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையராக இருந்த த.கஜேந்திரன், முன்னாள் செயல் அலுவலர்கள் கு.காமராஜ், ராமச்சந்திரன், கோயில் தலைமை எழுத்தர் ராஜா உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கடந்தாண்டு நவம்பர் மாதம் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் அனைவரும் வெளியே வந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20180705-WA0062_0.jpg)
சிலை கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்றவர்கள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருக்க கூடாது என பொதுநல வழக்கு போடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோயில் அருகே இருக்கும் ராஜாவின் வீட்டுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று 5ம் தேதி மதியம் கும்பகோணம் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, திருவிடைமருதூர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் கோட்டை தெருவில் குடியிருக்கும் ராஜாவின் வீட்டுக்கு சென்றனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் இடத்தில் குடியிருக்கும் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் சீல் வைக்கப்படும் என உதவி ஆணையர் தெரிவித்தார். அதற்கு ராஜா காலஅவகாசம் கேட்டுள்ளார். அதற்கு அறநிலையத்துறையினர் மறுத்து உடனடியாக வீட்டுக்கு சீல் வைத்தனர்.
இதனால் வீட்டுக்கு வெளியே வந்த ராஜா, அவரது மனைவி சரண்யா (எ ) அபினேஸ்வரி பாட்டி சந்திரா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அபினேஸ்வரியும், சந்திராவும் வீட்டின் தோட்டத்தில் வைத்திருந்த வாழைமரங்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லியை குடித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக சேர்த்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20180705-WA0051_1.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதுகுறித்து ராஜா கூறுகையில், " பந்தநல்லூர் கோயில் கோட்டையைச் சுற்றி ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். நாங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு குடியிருந்து வருகிறோம்.நான் சிலை கடத்தல் வழக்கில் கைதாகினேன். இந்த வழக்கு வரும் 11 ம் தேதி கும்பகோணத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் நான் அறநிலையத்துறை அதிகாரிகளை காட்டி கொடுத்துவிடுவேன் என பயந்து போய் என்னுடைய வீட்டுக்கு மட்டும் அறநிலையத்துறையினர் சீல் வைத்துள்ளனர். வீட்டை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டும் கொடுக்கவில்லை. எங்களுடைய அனைத்து பொருட்களும் வீட்டில் உள்ளே உள்ளது. தற்போது நான், பாட்டி, மனைவி, மகன், மகளை வைத்துக்கொண்டு நடுத்தெருவில் நிற்கிறேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)