Advertisment

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை கோரி வழக்கு! 

Case seeking ban on Rudra Thandavam movie!

Advertisment

ருத்ரதாண்டவம்திரைப்படத்திற்குத்தடை விதிக்க கோரியமனுவுக்குப்பதில் அளிக்க,படத்தயாரிப்புநிறுவனத்திற்குச்சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர்ரிச்சர்ட்ரிசி, கவுதம்மேனன்உள்ளிட்டோரின் நடிப்பில் ஜி.எம்.பிலிம்கார்பரேசன்தயாரிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளி வரவுள்ள திரைப்படம்ருத்ரதாண்டவம்.இந்த படத்தின்டிரைலர்அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருப்பதாகவும்,அவர்களைத்தவறாகச்சித்தரிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி,படத்துக்குத்தடை விதிக்க வேண்டும்எனச்சிறுபான்மை மக்கள்நலக்கட்சியின் தேசிய தலைவர் சாம்யேசுதாஸ்என்பவர் சென்னை 15வது உதவி உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மதஉணர்வுகளைப்புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும், சிறுபான்மைகிறிஸ்தவர்களைத்தவறாகச்சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும், இது இரு மதத்தினர் இடையில்பிரச்சனையைஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டி.ஜி.பி.யிடம்புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதுவரைபடத்தைத்திரையரங்கு மற்றும் ஓ.டி.டி. உள்ளிட்ட இணையதளத்தில்வெளியிடத்தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த 15வது உதவி உரிமையில் நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுதுமனுதாரர்சார்பாக வழக்கறிஞர் ஏ.பிரவின்குமார்ஆஜரானர் மனுதொடர்பாகத்தயாரிப்பு நிறுவனம்நாளைக்குப்பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையைநாளைக்குத்தள்ளிவைத்தார்.

highcourt mohan g
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe