Advertisment

அருண் விஜய் படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கு; தணிக்கை குழு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவு!

Case seeking ban on release of Arun Vijay film; Audit Committee and Producers Association ordered to respond

நடிகர் அருண் விஜய் நடிக்கும் பார்டர் படத்தை வெளியிடத்தடை விதிக்கக்கோரிய மனுவுக்குப் படத்தயாரிப்பாளர், தணிக்கை குழு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்கச் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டோனி சினிமாக்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சார்லஸ் ஆண்டனி சாம் தாக்கல் செய்த மனுவில், ஒன்றரை கோடி செலவில் தான் தயாரித்த பார்டர் படத்தை தயாரித்துள்ளதாகவும், இந்த தலைப்பை, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், தணிக்கை சான்று பெற்று, படத்தை வெளியிட உள்ள நிலையில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்டர் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் விளம்பரத்தை ஆல் இன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பார்டர் என்ற தலைப்பை தான் பதிவு செய்துள்ள நிலையில், அதே தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட்டால் தனக்கு பெருத்த இழப்பு ஏற்படும் என்பதால், பார்டர் என்ற தலைப்பில் அருண் விஜய் நடித்துள்ள படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை 6வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிராபகரன், மனுவுக்கு ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையைத்தள்ளிவைத்தார்.

Advertisment

judgement highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe