Advertisment

அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

nn

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்ட மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'அதிமுக பொன்விழா எழுச்சிமாநாடு' என தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டிற்காக ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் அவரவர்கள் மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தனர். தற்பொழுது மாநாட்டிற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சிவகங்கையைச் சேர்ந்த சேது முத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், 'மதுரை விமான நிலையத்தைச் சுற்றியபகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளது. ஆனால், மதுரையில் நடத்தப்படும் அதிமுக மாநாட்டுக்கு விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மாநாட்டுக்கு வருவதால் பெருமளவுக்கு போக்குவரத்துக்குஇடையூறு ஏற்படும் என்பதால் அதிமுகவின் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

admk madurai highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe