Advertisment

பெண்ணுக்கு பாலியல் தொல்லை! விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி மீது வழக்கு 

Case registered on Vishwa Hindu Parishad executive

Advertisment

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் என்.ஆர்.என். பாண்டியன். விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலச் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவருடைய வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு வீட்டு வேலை செய்து வந்த 45 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண் வேலையில் இருந்து நின்றுவிட்டார். அவரை மீண்டும் வேலைக்கு வருமாறு பாண்டியன் அழைத்துள்ளார்.

அவர் வேலைக்கு வர மறுக்கவே, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் பயந்த அந்தப் பெண், என்.ஆர்.என்.பாண்டியன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா, என்.ஆர்.என் பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe