சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நிஜாம் காலனியைச் சேர்ந்த ரபூர்ரகுமான்(வயது 52) என்பவரின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர் மீது அசாம் மாநிலம் கவுகாத்தி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவரை விமான நிலைய அதிகாரிகள் அசாம் மாநில போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
அதேபோல் திருச்சியில் இருந்து துபாய் செல்ல சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த காதர்ரபீக் (வயது 32) திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவரது ஆவணங்களை சோதனையிட்டபோது, அவருக்கு சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் மோசடி வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அவரை வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.