Advertisment

எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு!

Case registered against SV Sekar!

Advertisment

நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான எஸ்.வி சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில், “அதிமுகவில் அண்ணாவின் படத்தையும், பெரியார் படத்தையும் நீக்கிவிட்டு எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதாபடங்களை வைத்து அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்என்று கட்சி பெயரை மாற்றிஅரசியல் செய்தால் தமிழகத்தில் அதிமுகவிற்கு குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பாவது இருக்கும்” என்றபடி பேசியிருந்தார்.

இதற்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்திருந்தநிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எஸ்.வி. சேகர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூட தெரியாது, அவர் நினைத்ததையெல்லாம் பேசுவார் ஆனால் வழக்குகள் வந்தால் ஒளிந்து கொள்வார் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர்குறித்து அவதூறாகப் பேசியதாகஎஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நுங்கம்பாக்கத்தில்,ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.முதலமைச்சருக்கு பதில் அளிக்கும் வகையில், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் எஸ்.வி.சேகர் தேசியக் கொடியையும், முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்பேசியுள்ளார் என அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தேசியக் கொடியை அவமதித்ததாக அளிக்கப்பட்ட புகாரில்பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது தேசிய கௌரவ பாதுகாப்புச்சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

case police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe