15 வயதில் திருமணமா? போலீஸில் சிக்கிய பெற்றோர்!

Case registered against parents who tried to marry a girl ...

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகில்உள்ளது டி.எடையார் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த குமார் என்பவரதுமகன் பிரபாகரன் வயது 21. இவருக்கும் பக்கத்து வீட்டில் உள்ள 9ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் சம்மதத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தச் சிறுமியும் பிரபாகரனும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் அதனடிப்படையில் இருவீட்டாரும் சேர்ந்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளதாகவும்,விழுப்புரம் மாவட்ட சமூக நல அலுவலர் லலிதா, சைல்டு லைன் அமைப்பினர் ஆகியோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவர்கள் நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்த சம்பவம் உண்மை எனத் தெரியவந்ததையடுத்து, மாவட்ட சமூக நல அலுவலர் லலிதா திருவெண்ணெய்நல்லூர் போலீஸில் புகார் அளித்ததோடு சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைத்தார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவருடைய பெற்றோர்களான தவிட்டம்மாள் மற்றும் குமார் கூத்தம்மாள், பிரபாகரன் ஆகியோர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe