பாஜக பிரமுகர் எச்.ராஜா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஜக பிரமுகர் எச்.ராஜா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை நகர திமுக செயலாளர் துரை ஆனந்த் தலைமையிலான திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிவகங்கையில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி நிகழ்வின்போது திமுக தலைவர்களையும், பெரியாரையும், பெண்களையும் இழிவுபடுத்திப் பேசியதாக புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காளையார் கோவிலிலும் எச். ராஜா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் கடந்த 21 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போதும்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.