Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு; கடலூரில் பதற்றம் 

Case registered against former AIADMK minister MC Sampath

கடலூர்மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேல் குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தஅதிமுக முன்னாள் அமைச்சர்எம்.சி.சம்பத். இவரது உறவினர் ராமச்சந்திரன் மருமகன் குமார். சம்பத் அமைச்சராகஇருந்தபோது அவரது உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாகத்தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்கள் ராமச்சந்திரனை தாக்கியதாகக் கூறி அவரும்மேலும் இரண்டு பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே ராமச்சந்திரன் எங்களைத்தாக்கியதாக எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்களும்அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மாலை எம்.சி. சம்பத் மற்றும் அவரது சகோதரர் உட்பட 14 பேர் மீது 9 பிரிவுகளில்வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி.வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டம் நடத்தினர்.

Advertisment

admk sampath
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe