Case registered against AIADMK ex-minister

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக செல்லப்பாண்டியன் மீது திமுக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் செல்லப்பாண்டியன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தவர் செல்லப்பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment