baby

மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் சாலையோரம் வசித்து வந்த சித்ரா என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கிய பாலச்சந்திரன், கலாநிதி மற்றும் போலி சான்றிதழ் வழங்கியவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 6 குழந்தைகள் பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இதில் 3 குழந்தைகள் இறந்ததால் 3 பெண் குழந்தைகளை போலி சான்றிதழ் மூலம் வளர்க்க கொடுத்துள்ளனர். மேலும் முத்துப்பேட்டையை சேர்ந்த கலாநிதி பாலச்சந்தர் தம்பதியினரிடம் காவல்துறையின் விசாரணை செய்ததில் போலி ஆவணங்கள் மூலம் குழந்தையை பெற்றதாக மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு வந்த புகாரை அடுத்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சித்ராவின் உறவினர் சுகன்யா மற்றும் கணேஷ்குமார் உள்பட 3 குழந்தைகளை வாங்கிய ஆறு பேரும்காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குழந்தைகள் விற்கப்படவில்லை என்று உறுதி செய்யபட்டு, காவல் இணை ஆணையர் தங்கதுரை, உதவி ஆணையர் சக்கரவர்த்தி ஆகியோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர்.

இதனையடுத்து தத்து எடுக்காமல் குழந்தைகளை வளர்த்தவர்கள் 6 பேர்,போலி சான்றிதழ் வழங்கியவர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விஜய சரவணன் கூறியதாவது, ''தங்களுக்கு கிடைத்த தகவலின்படி பழங்காநத்தம் பகுதியில் குழந்தைகளை முறைப்படி பதிவு செய்யாமல் விற்பதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்து அதன் பேரில் அவனியாபுரம் காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதில் சித்ரா என்பவரின் மூன்று பெண் குழந்தைகள் 2 1/2 வயதுமற்றும் 4 வயது இரட்டை குழந்தைகள் மற்றவர்களிடம் இருந்து மீட்கப்பட்டு மதுரை மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் கீழ் கொண்டுவரப்பட்டது.நாங்கள் அளித்த புகாரின் பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று குழந்தைகளை வளர்த்த பெற்றோர் 6 பேர்உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்'' என்றார். முறையாக பதிவுசெய்து குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க இடைத்தரகர்களிடம் அதிகமாக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் கூறிய அவர் , குழந்தைகள் தொடர்பான புகார்கள் 89 400 14 914 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என கூறினார்.