சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

Case registered against 5 people including Seeman

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியைஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தெருமுனைப் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

இதில், தேர்தல் விதிகளை மீறியும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக ஏற்கனவே வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சீமான், கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சீமான் மீது ஏற்கனவே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஈரோடு நெரிகல்மேட்டில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து மாலை 5.30 மணி முதல் 6.30 மணி பொதுக்கூட்டம் நடத்திட நாம் தமிழர் கட்சியினர் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், தேர்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மாலை 6.15 மணிக்கு பொதுக்கூட்டத்தை தொடங்கி இரவு 9.15 மணிக்கு முடித்தனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி நவீன், கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தேர்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியினர் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Erode seeman
இதையும் படியுங்கள்
Subscribe