முதல்வர் குறித்து அவதூறு! எச்.ராஜா மீது வழக்கு! 

 Case register on H. Raja  regarding comment on Chief Minister!

விநாயகர் சதுர்த்தி கடந்த 18ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி தமிழ்நாட்டில் ஆங்காங்கே விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் பா.ஜ.க. தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா கலந்து கொண்டார்.

இந்த ஊர்வலத்தில் அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். அதேபோல், அந்த ஊர்வலத்தில், இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் பேசியுள்ளார். இதற்கு சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், காளையார்கோயில் காவல்நிலையத்தில் எச்.ராஜா மீது புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எச். ராஜா மீது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாகப் பேசியது, இரு மதத்தினர் இடையே மோதல் போக்கை உருவாக்கும் விதமாகப் பேசியது என மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்
Subscribe