ரேசன் கடைகளில் வழங்கப்படவுள்ள 500 ரூபாய்க்கான மளிகைபொருட்களை ரேசன் கார்டு இல்லாத அனைத்து மக்களுக்கும், நேரடியாக வீட்டிலேயே வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

Case for providing groceries to family card unholders

ஊரடங்கின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக, வீட்டிற்கு தேவையான 19 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பை ரேசன் கடைகளில் ரூபாய் 500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

Advertisment

nakkheeran app

500 ரூபாய் மதிப்பிலான இந்த அத்தியாவசிய பொருட்கள், குடும்ப அட்டை வைத்திருப்பவர் மட்டுமல்லாமல், குடும்ப அட்டை இல்லாத அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் மளிகைப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து வழங்க உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கரோனோ நோய் தொற்றை எதிர்கொள்ள ஊட்டச்சத்து அவசியமாக உள்ள சூழலில், ஊரடங்கினால் 10 லட்சத்திற்கும் அதிகமான நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு போதுமானஉணவு கிடைக்காத நிலை உள்ளது என்றும், அத்தகைய ஏழை மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான உணவை எடுத்துச் செல்லும் தன்னார்வலர்களை கைது செய்யக்கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.