Skip to main content

மலைகளின் இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரிய வழக்கு! -தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுக உத்தரவு!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
Case for protecting the natural resources of the mountains! National Green Tribunal to be approached


மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை வளங்களை பாதுகாத்திட நிரந்தர குழு அமைக்கக்கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகும்படி உத்தரவிட்டுள்ளது.


மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதால், அவற்றை பாதுகாக்க நிரந்தரக் குழு அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், கன்னியாகுமரி முதல் குஜராத் வரை மேற்கு தொடர்ச்சி மலை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. சுந்தரவனக்காடுகள் முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு தொடர்ச்சி மலை பரந்து விரிந்திருக்கிறது. இந்த மலைத் தொடர்களில் ஆயிரக்கணக்கில் அரிய வகை மரங்கள், பல்லுயிர்கள் இருக்கின்றன.

 

 


மேலும், தமிழக அரசின் வனப் பாதுகாப்பு மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி,  சிலர் இந்த மலைத் தொடர்களில் இருந்து அரிய வகை மரங்களை வெட்டி எடுப்பதால்,  பல்லுயிர்கள் மறைந்து போகின்றன.  இதனால்,  மலைத் தொடர்கள் தரிசு நிலங்களாக மாறுகின்றன. இந்த மலைத் தொடர்களின் இயற்கை வளங்களையும், பல்லுயிர்களையும் காப்பாற்ற சுற்றுச்சூழல் அறிஞர் மாதவ் காட்கில் மற்றும் விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் ஆகியோரின் பரிந்துரைகளை பின்பற்றி நிரந்தர குழு அமைக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு,  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக,  பசுமை தீர்ப்பாயத்தைதான் அணுக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.