A case of not wearing a mask on a thousand people a day

தமிழகம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினமும் வாகன ஓட்டிகளைக் கண்காணித்து, அவர்கள் தங்களுடைய பயணத்தை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு திருச்சி மாநகருக்குள் சுமார் 100 இடங்களுக்கும் அதிகமாக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment

வாகனங்களில் வருபவர்கள் முகக் கவசம் அணியாமல் வந்தால் உடனடியாக 200 ரூபாய் அபராதத்தை விதித்து அவர்களை எச்சரித்து அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

தற்போது கடந்த ஒரு மாதத்திற்குள் நாளொன்றுக்கு ஆயிரம் பேர் மீது முகக் கவசம் அணியாமல் சென்ற வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, இன்றுவரை 30,000 பேர் மீது முகக்கவசம் அணியாமல் சென்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் என 1,700 பேர் மீதும், விதிமுறைகளை மீறிய வணிக வளாகங்கள் என 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீதும் அபராதம் விதித்துள்ளதாக காவல்துறை தற்போது அறிவித்துள்ளது.

தற்போது நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை குறையாமல் நாளுக்குநாள் அதிகரிப்பதோடு வாகனங்களில் செல்பவர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்குச் செல்வதாக கூறுவதால் காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Advertisment

எனவே அரசு முழு ஊரடங்கை செயல்படுத்தினால் மட்டுமே தற்போது நிலவிவரும் இந்த நோய் தாக்கத்தின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.