Skip to main content

கொடநாடு வழக்கு; மனோஜ் சாமிக்கு சம்மன் அனுப்பிய சி.பி.சி.ஐ.டி.

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
case of Kodanadu CbCID sent summons to Manoj Sami

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கு தொடர்பாக முதல் குற்றவாளியாக சேர்க்கப்ட்டடுள்ள சயான் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) மதியம் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி இருந்தனர். இந்த விசாரணையின் போது அவர் 35 பக்கங்களுக்கு வாக்குமூலம் அளித்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவில் பூசாரியாக உள்ள மனோஜ் சாமி 9 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சயான் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக மனோஜ் சாமிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அளித்துள்ளனர். அதில் வரும் 15 ஆம் தேதி (15.02.2024) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வகக் குழு தமிழகம் வருகை தந்திருந்தனர். அதன்படி இந்த குழுவினர் திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் இந்த வழக்கில் தொடர்புடைய 60 தொலைபேசி எண்கள், 19 டவர் இடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காங்கிரஸ் நிர்வாகி மரணம்;மகனிடம் சிபிசிஐடி விசாரணை

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
 Congress executive dies; CBCID probes son

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த மாதம் 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர் பல இடங்களிலும் தேடியும்கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த மாதம் 4 ஆம் தேதி (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் பலரிடமும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் 23.05.2024 காலை சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவைத் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்திருந்தார்.

இதனையடுத்து ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி வசம் வழக்கு மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அவர் உயிரிழந்து கிடந்த தோட்டத்தில் கிணறு, மோட்டார் ரூம் மற்றும் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் ஆகிய பகுதிகளில் இன்று சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ரமணன், ஐ.ஜி அன்பு எஸ்.பி முத்தரசி ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது. மொத்தம் இரண்டரை ஏக்கர் கொண்ட அந்தத் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறை, கிணறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தோட்டத்திற்கு அருகே இருக்கக்கூடிய வீட்டில் உள்ள அவருடைய மகன் கருணையா ஜப்ரினையும் அழைத்து அவரிடமும்  விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

கேசவ விநாயகத்துக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
High Court barrage of questions for Kesava Vinayakam

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கும் அளிக்கும்படி பாஜகவின் தமிழக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். 

High Court barrage of questions for Kesava Vinayakam

இத்தகைய சூழலில் சிபிசிஐடி போலீசார் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கேசவ விநாயகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (03.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், சட்டவிரோதமான வழக்கு என எப்படிக் கூற முடியும். சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினால் அதன்படி ஆஜராக வேண்டுமே தவிர அதனைத் தவிர்த்து சட்டவிரோதம் எனக் கூறமுடியாது. எனவே சிபிசிஐடி போலீசாரிடம் கேசவ விநாயகம் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளார்.