அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்தக்கூடாது என தமிழக உள்துறை செயலாளருக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

case on highcourt not to persecute us

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாநில அரசின் 144 தடை உத்தரவு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பால், மருந்து, மளிகை போன்றவற்றை விற்கவும், விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் சமூக விலகல் அறிவுத்தலால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்களிடம் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி, பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர். காவல்துறையினர், சாலையில் செல்பவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்கின்றனர். சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களை கைது செய்யலாமே தவிர, அவர்களைத் தண்டிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ள சூழலில், காவல்துறை தாக்கும்போது மக்களும் சில இடங்களில் திருப்பி தாக்குகின்றனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றத்தை மனுதாரர் நாடும் பட்சத்தில், மனுவிற்கு எண்ணிடும் பணிகள் முடிந்ததும், சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முன் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.