ADVERTISEMENT

‘போலிச் சான்று’ - ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்கு

02:29 PM Jan 02, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் அருகே போலிச் சான்று கொடுத்துத் தேர்தலில் போட்டியிட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட தோலப்பள்ளி ஊராட்சியில் தற்போது தலைவராக இருக்கக்கூடிய கல்பனா 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்த ஊராட்சி ஆதிதிராவிடர் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கல்பனா போலியாக ஆதிதிராவிடர் எனச் சான்று அளித்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாக்கியராஜ் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் காவல்நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனா மீது பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT