Advertisment

‘போலிச் சான்று’ - ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்கு

case has been registered against president Panchayat contested  elections with fake evidence

வேலூர் அருகே போலிச் சான்று கொடுத்துத்தேர்தலில் போட்டியிட்ட ஊராட்சி மன்றத்தலைவர் கல்பனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்குஉட்பட்ட தோலப்பள்ளி ஊராட்சியில் தற்போது தலைவராக இருக்கக்கூடிய கல்பனா 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்த ஊராட்சி ஆதிதிராவிடர் பிரிவினருக்காகஒதுக்கப்பட்டிருந்த நிலையில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கல்பனா போலியாக ஆதிதிராவிடர் எனச் சான்று அளித்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதாகஅவரைஎதிர்த்துப் போட்டியிட்ட பாக்கியராஜ் புகார் அளித்திருந்தார்.

Advertisment

இதையடுத்து புகாரின்அடிப்படையில் வேப்பங்குப்பம் காவல்நிலையத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் கல்பனா மீது பட்டியலினத்தவர்வன்கொடுமை தடுப்புச் சட்டம்உள்ளிட்ட7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

police Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe