
திருப்பூரில் வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில்வதந்தி பரப்பியவர்மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத்தொழிலாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநவ், வெளியானது போலியான வீடியோ, எனவே யாரும் பதற்றமடைய வேண்டாம் என அறிவுறுத்தினார்.
மேலும், ‘வடமாநிலத்தொழிலாளர்களுக்காக பிரத்தியேக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஸ்பெஷல் செல் 24 மணி நேரமும் இருக்கிறது. ஏதேனும் பிரச்சனை என்றால் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்: 94981-01300, 0421-2970017’என திருப்பூர் மாவட்டகாவல்துறை சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us